வணக்கம் சொல்லுங்க...
UPDATED : மார் 09, 2023 | ADDED : மார் 09, 2023
எளிய குடும்பத்தில் பிறந்த சகோதரிகள் அருகில் உள்ள நகரத்தில் வேலை பார்த்து வந்தனர். தந்தையில்லாத அவர்களுக்கு வயதான தாயால் வரன் பார்த்து திருமணம் நடத்தி வைக்க முடியவில்லை. பாதிரியார் ஒருவர் அவர்களது பக்கத்து வீட்டில் குடியிருந்தார். அவரிடம் சென்று மூத்த பெண் தங்களது திருமணநிலை பற்றி சொன்னாள். அதற்கு அவர் ''நீங்கள் அதிகாலையில் எழுந்து ஆண்டவருக்கு வணக்கம் சொல்லுங்கள்... அதன் பிறகு நடப்பது எல்லாமே நல்லதாக முடியும்'' என சொன்னார். மூன்று மாதம் கழித்து சகோதரிகள் திருமண அழைப்பிதழுடன் அவரை பார்க்க வந்தனர்.