உள்ளூர் செய்திகள்

திறமை அவசியம்

அந்த மலைப்பிரதேசத்தில் வீட்டுக்கு ஒரு குதிரை வைத்திருந்தனர். இதை கண்ட ஆல்பர்ட்டும் குதிரை வேண்டும் என தந்தையிடம் கேட்டான். அவரோ அவ்வூரில் போர் பயிற்சி கொடுக்கும் நிலையத்திற்கு சென்று கற்று வா என்றார். அதன்படி வந்த அவனை பக்கத்து கிராமத்தில் வைத்தியர் சொல்லித்தரும் வைத்தியமுறைகளையும் படித்துக்கொள் எனச் சொன்னார். அங்கிருந்து பல மாதம் கழித்து வீட்டிற்கு வந்தான். ஒரு நாள் அப்பாவிடம் ஏன்தான் குதிரையை கேட்டோமே என சோர்வாக நினைத்துக் கொண்டிருந்த அவனுடைய காதில் குதிரையின் கனைப்பு கேட்டது. வாசலில் அவனுடைய தந்தை குதிரையுடன் நின்று கொண்டிருந்தார். மகிழ்ச்சியில் ஏன் அப்பா இவ்வளவு நாள் கழித்து எனக்கு குதிரை வாங்கி தந்துள்ளீர்கள் என கேட்டான். அதற்கு குதிரைக்கு எதாவது நோய் வந்தாலும், அடிபட்டாலும் நீயே கவனித்துக் கொள்ளவும், யாராவது திருடிச் சென்றால் அதை காப்பாற்றவும் உனக்கு அதற்குரிய தகுதியும், திறமையும் வேண்டும். அதற்கான பயிற்சி தான் இவ்வளவு நாளும் என்றார் தந்தை. மகிழ்ச்சியில் தந்தையுடன் குதிரையில் வலம் வர தயாரானான் ஆல்பர்ட்.