துன்பம் வரும் வேளையிலும் சிரிங்க!
துன்பம் வரும்போது சிரித்த முகத்துடன் இருக்க வேண்டும் என்பது இயலாத காரியம் என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால் பக்தி உள்ளவர்கள் இது பற்றி கவலைப்படுவது இல்லை. ஒரு செல்வந்தர் காரில் சென்று கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளாகி காயமடைந்தார். அவர் பல தர்மங்களை செய்தவர். நல்லவர்களுக்கு தான் சோதனை அதிகம் வருகிறது என்று கவலைப்படுபவர்கள் மத்தியில் அவர் மிகவும் வித்தியாசமானவராக இருந்தார். தனக்கு இப்படி ஆகிவிட்டதே என அவர் வருத்தப்படவே இல்லை. “என் ரட்சகர் இயேசு எவ்வளவு உயர்ந்தவர்! அவர் பட்ட பாடுகளை விடவா, இப்போது எனக்கு ஏற்பட்டுள்ள வேதனை அதிகமானது! அவரைப் போல யார் சிரமப்பட முடியும்,” என்று தன்னை பார்க்க வந்தவர்களிடம் சொல்லி ஆறுதலடைந்தார்.அதனால் அவருக்கு தேவனின் ஆசிர்வாதம் கிடைத்தது. வாழ்க்கையில் சந்திக்கும் துன்பங்களை பெரிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள். அந்த வேளையில் கர்த்தரை துணைக்கு அழைத்தால் அவர் ஆசிர்வதிப்பார்.