உள்ளூர் செய்திகள்

நல்லதை விதையுங்கள்

விவசாயி ஒருவருக்கு சோளத்தை நன்கு பயிரிட்டதற்காக விருது கொடுத்தது அரசு. அதையே கண்காட்சியில் வைக்க அங்கேயும் அவருக்கே பரிசு கிடைத்தது. பக்கத்து நில விவசாயிகளுக்கு மட்டும் உங்களது சோள விதைகளை கொடுக்கிறீர்களே என நிருபர் ஒருவர் கேட்க, அதற்கு அவரோ பழுத்த சோளத்தில் இருந்து மகரந்தத்தை காற்று எடுத்து வயல்களுக்குள் சுற்றுகிறது. என் பக்கத்து விவசாயிகள் தரம் குறைந்த சோளத்தை பயிரிட்டால் மகரந்தசேர்க்கை என் சோளத்தின் தரத்தையும் குறைத்துவிடும். எனவே பக்கத்து விவசாயிகளுக்கு நல்ல சோளத்தை விளைவிக்க உதவி செய்ய வேண்டியது எனது கடமை என்றார் விவசாயி.