வயிறு நம்மை வாழ்த்தும்
UPDATED : பிப் 12, 2021 | ADDED : பிப் 12, 2021
ஒருமுறை பணக்காரர் ஒருவர் விருந்துக்கு ஏற்பாடு செய்தார். உள்ளூர் பிரமுகர்களை அழைத்த போதும், ஒருவரும் வரவில்லை. '' விருந்தில் பங்கேற்றால் நாமும் பதிலுக்கு விருந்து நடத்தி அழைக்க வேண்டியிருக்கும்'' எனத் தவிர்த்தனர். உணவு நிறைய மிச்சப்பட்டது. பணியாளர்களிடம், '' சாலை ஓரத்தில் வாழும் ஆதரவற்றோர், ஏழைகளை சாப்பிட அழைத்து வாருங்கள். அவர்களின் பசி தீர்ந்ததும் வயிறு நம்மை வாழ்த்தும்'' என்றார். இதை அவர் முதலிலேயே செய்திருக்கலாம் அல்லவா.... நீங்கள் உங்கள் வீட்டில் எப்போது விருந்து நடத்தினாலும் ஆதரவற்ற முதியவர்கள், அனாதைகள், ஏழைகளை அழையுங்கள். அவர்களுக்கு உங்களின் உதவி தேவைப்படுகிறது.