நல்லதை எண்ணுங்கள்
UPDATED : மார் 14, 2023 | ADDED : மார் 14, 2023
ரோஜா தோட்டத்தை இரு நண்பர்கள் ஒன்றாக பார்த்தனர். அதில் ஒருவர் ரோஜாவில் முட்கள் அதிகம் உள்ளது என சொல்ல மற்றொருவரோ ரோஜா அழகாக இருக்கிறது என சொன்னார். இந்த உலகில் இப்படித்தான் பல மனிதர்கள் வாழ்கின்றனர். இயற்கையை கண்டு வருந்த வேண்டாம். காரண காரியமில்லாமல் எதுவும் நடக்க வில்லை. நல்லதை எண்ணுங்கள். நல்லதே நடக்கட்டும்.