உள்ளூர் செய்திகள்

உண்மையான முயற்சி

நிறுவனத்திற்கு புதியதாக தேர்ந்தெடுத்த இளைஞனுடன் வாடிக்கையாளரை பார்க்க சென்றார் மேலாளர். அவரிடம் பணி பற்றி விபரங்கள் அனைத்தையும் சொல்லி கொண்டே வந்தார். வாடிக்கையாளர் வெளியே சென்றிருப்பதை அறிந்த அவர்கள் எதிர் வீட்டில் வசிக்கும் புதியவரை பார்த்து விடலாம் என அங்கு சென்றார்கள். அப்போது வாசலில் கட்டப்பட்டிருந்த நாய் அவர்களை பார்த்து குரைக்க... வந்த விபரங்கள் அனைத்தையும் தபாலில் எழுதி விசிட்டிங் கார்டு ஒன்றையும் இணைத்து அங்கிருந்த லெட்டர் பாக்ஸில் போட்டு விட்டு பழைய வாடிக்கையாளரை பார்க்க இருவரும் வந்தனர். இருந்தாலும் எதிர்வீட்டில் அடைந்த ஏமாற்றம் இளைஞனுக்கு வருத்தத்தை உண்டாக்கியது. அதை தெரிந்து கொண்ட மேலாளர் நாய்க்கு நாம் யார் என்பது தெரியாது. வாடிக்கையாளர் நம்மை ஏமாற்ற வில்லையே என சொன்னார். அப்போது அவரிடம் இருந்த அலைப்பேசி ஒலித்தது. சார் வணக்கம். வெளியூரில் இருந்து இப்போது தான் வீட்டிற்கு வந்தேன். உங்கள் நிறுவனத்தை பற்றி தான் நினைத்தேன். பாருங்கள் நீங்களே என்னை தேடி வந்துள்ளீர்கள். நன்றி. தங்களை பார்க்க எங்கு வர வேண்டும் என கேட்டார் அந்த புதிய வாடிக்கையாளர். அதை கேட்டுக் கொண்டிருந்த இளைஞனின் முகம் பிரகாசமானது. உண்மையான முயற்சிக்கு பின்னால் வெற்றி தேடி வரும் என்பது நான் கற்ற பாடம் என்றார் மேலாளர்.