எத்தனை பெரிய மனிதனுக்கு
டிகிரி முடித்த தன் மகனை, முதலாளியிடம் அழைத்துச் சென்றார் சாமுவேல். ''ஐயா! என் மகன் பி.எஸ்.சி படிச்சிருக்கான். உங்களுக்கு தெரிந்த ஏதாவது ஒரு நிறுவனத்தில் வேலை வாங்கித்தாருங்கள்'' என்றார் சாமுவேல். முதலாளி அந்த பையனிடம், ''தம்பி. நான் சொல்வதைக்கேள். இனி உங்க அப்பாவை கூட்டிட்டு எங்கேயும் வேலை கேட்டு போகாதே. அவருக்கு உன் திறமை, படிப்பு மீது நம்பிக்கை இல்லை. எத்தனை பெரிய மனிதனுக்கு.. எத்தனை சிறிய மனமிருக்கு.. என்று பார்த்தாயா'' என சொன்னார். இதைக்கேட்ட சாமுவேல் தன் தவறை எண்ணி தலைகுனிந்தார். ''தம்பி. நான் சொன்னால் நிச்சயம் வேலை கிடைக்கும். அப்படி செய்தால் மற்றவர்கள் உனக்கு திறமை இல்லை என்று நினைப்பார்கள். உன் படிப்பு, திறமை எல்லாம் தைரியமாக எடுத்துச் சொல்லு. நிச்சயம் ஏதாவது ஒரு இடத்தில் வேலை கிடைக்கும். தைரியமும், தன்னம்பிக்கையும்தான் வாழ்க்கைக்கு வேண்டும். அதை ஒருபோதும் விட்டுவிடாதே'' என அறிவுரை கூறினார் முதலாளி.