உள்ளூர் செய்திகள்

ஆடிய ஆட்டம் என்ன

ஜெர்மனியை ஆட்சி செய்து வந்தவர் ஹிட்லர். இவர் தனது சர்வாதிகாரத்தின் மூலம் உலகையே நடுங்க வைத்தவர். அப்படிப்பட்டவர் தன் இறப்பை கண்டு நடுங்கி ஒடுங்கிப்போனார். அவரோடு கூட்டு சேர்ந்து சர்வாதிகாரம் செய்தவர் இத்தாலியை சேர்ந்த முசோலினி. ரஷ்ய நாட்டு மக்கள் முசோலினி இறந்தபோது, அவரது உடலை தலைகீழாக தொங்க விட்டு செருப்பால் அடித்து மனக்குமுறலை தீர்த்துக் கொண்டனர். இப்படி ஆடாத ஆட்டமெல்லாம் ஆடியவர்கள் மண்ணுக்குள்ள போன கதை உங்களுக்கு தெரியுமா... இவர்களை போல் நம்மில் பலர் ஆணவமாக இருக்கிறார்கள். இதற்கு காரணம் என்ன... படிப்பு, பதவி, சொத்தா என்று தெரியவில்லை. ஆனால் வாழ்க்கை யாருக்கும் சொந்தம் இல்லை என்பது மட்டும் தெரிந்து கொள்ளுங்கள். சொத்து சுகங்கள் நம்மோடு வரப்போவதில்லை. ஒரே ஒரு முறை வாழப்போகிறோம். எதை விதைக்கிறோமோ அதைத்தான் அறுவடை செய்யப்போகிறோம். எனவே நல்ல செயல்கள், எண்ணங்களை விதைப்போம். மகிழ்ச்சியோடு அறுவடை செய்வோம்.