குறிக்கோளுடன் செயல்படு...
* வேலையில் குறிக்கோளுடன் செயல்படு. உயர்வை அடைவாய். * வேலையில் அலட்சியமாக இருந்தால் ஏமாற்றம் அடைவாய்.* புகழுக்காக செய்யும் பணி துாய்மையான மனங்களில் ஒட்டுவதில்லை. * பிறருக்கு வழியை சொல்வதைக்காட்டிலும் எடுத்துக்காட்டாக இருங்கள். * உறுதியாக செயல்படுத்தும் செயல் முன்னேற்றம் அடையும்.* உங்களுடைய வாழ்க்கை முறை ஒருவரால் கண்காணிக்கப்படுகிறது என்பதை மறவாதீர்.* குறுக்கு வழியில் கிடைக்கும் பதவி குறுகிய காலத்தில் காணாமல் போய் விடும். * கடுஞ்சொற்களை பயன்படுத்தாதீர். அது வேதனையை தரும். * அளவான செல்வம் நிறைவான வாழ்விற்கு வழி.* உணர்ச்சிகளை நெறிப்படுத்துபவரே சிறந்த வீரர்.* பிறர் துன்பம் கண்டு வருந்தும் போது வானுலகம் தானாக வழி திறக்கும். * நல்வழியில் நடப்பவர்களுக்கு ஒரு நாளும் தீங்கு வராது.* பெண்மையை போற்றுங்கள். * செயலில் குழப்பம் ஏற்படுகிறது என்றால் அதை தள்ளிப் போடுங்கள். * உடனுக்குடன் செய்யும் வேலைகள் மகத்தான வெற்றியை பெறும். -பொன்மொழிகள்