இயற்கை அளித்த வரம்
UPDATED : டிச 15, 2023 | ADDED : டிச 15, 2023
இயற்கை அளித்த வரம் மரம். மனிதர் இல்லாமல் மரங்களால் வாழ முடியும். மரங்கள் இல்லாமல் மனிதர்களால் வாழ முடியாது. * பூ, காய், கனிகளைத் தருகின்றன. * நிலை, கதவு, ஜன்னல் போன்ற மரச்சாமான்கள் செய்ய உதவுகிறது. * மரங்களின் வேர், பட்டை, காய், கனிகள் மருந்தாகி நோய்களைத் தீர்க்கின்றன. * நிலத்தடி நீரை சேமிப்பதில் மரங்களின் பங்கு அதிகம்.வீட்டிற்கு ஒரு மரம் நடுங்கள். நாட்டிற்கு அது வளம் சேர்க்கும்.