மனதாலும் நினைக்காதே
UPDATED : டிச 15, 2023 | ADDED : டிச 15, 2023
* பிற பெண்களை மனதாலும் நினைக்காதே.* இனிக்க இனிக்க பேசுபவரிடம் எச்சரிக்கையாக இரு.* பேராசை கொண்டவர்களை அவர்களின் பார்வையிலேயே அறிய முடியும்.* தீய பழக்கமுடையவர்கள் மரணம் நோக்கி வேகமாக நகருகிறார்கள்.* லஞ்சம் வாங்குபவர்கள் 'வாழும் போதே' நரகத்தை அனுபவிப்பர். * பெரியவர்களின் அறிவுரை எட்டிக்காய் போல் கசக்கும். ஆனால் பின்னாளில் இனிக்கும். * ஒழுக்கமில்லாத செயல் நோயை உண்டாக்கும்.