அமைதியுடன் வாழுங்கள்
UPDATED : ஜன 12, 2023 | ADDED : ஜன 12, 2023
* மன ஒற்றுமை கொண்டிருங்கள். அமைதியுடன் வாழுங்கள். * மூடனை உரலில் போட்டு குத்தினாலும், அவனுடைய மூடத்தனம் போகாது. * கேட்பவனுக்குக் கொடு. முகத்தைத் திருப்பாதே. * ஏழை, ஆதரவற்ற குழந்தைகளுக்கு நீதி செய்யுங்கள். * குழந்தைகளை நடத்த வேண்டிய வழியில் நடத்தினால், வயதானாலும் அவர்கள் அதை விடாதிருப்பர். * பலசாலியை விட கோபம் கொள்வதில் மிதமாயிருப்பவரே சிறந்தவர். * அகங்காரம் வரும்போது அதற்குப் பின்னே அவமானமும் வரும். * உண்மையை பேசுங்கள். அதுவே நன்மை தரும்.- பைபிள்