உள்ளூர் செய்திகள்

பொறுத்தார் பூமி ஆள்வார்

* பொறுமையுள்ளவர்கள் பூமியையே அழகாக்கி, அமைதிப் பெருக்கில் பேரானந்தம் அடைவார்கள்.* உன்னுடைய கண் தீமையானதாயிருந்தால், உன் உடல் முழுதும் இருள் சூழ்ந்திருக்கும். எனவே கண்களால் ஒளி பொருந்தியவற்றை மட்டும் பார்க்கப் பழகு.* தீயவர்களை பார்த்து எரிச்சல் அடையாதே, பொறாமை கொள்ளாதே. ஏனெனில் அவர்கள் புல்லைப் போல வெகு சீக்கிரத்தில் வாடிப்போய் விடுவார்கள்.* அகங்காரமானவர்களை எச்சரியுங்கள். பலகீனமானவர்களை தேற்றுங்கள்.* உங்கள் நாக்கினை கபடமான பேச்சிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். அது நரகத்தில் தள்ளும் அளவு வலிமையானது. * நாம் இந்த உலகத்திற்கு ஒன்றும் கொண்டு வந்ததில்லை; ஒன்றையும் கொண்டு போகப் போவதுமில்லை. - பைபிள் பொன்மொழிகள்