பென்சிலை எடுங்க! டிக் செய்யுங்க!
வாழ்நாள் வீணாகிறது என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? ஒரு பென்சிலை எடுங்கள். கீழ்க்கண்ட கேள்விகளுக்கு 'இல்லை' என்ற பதிலை மட்டும் 'டிக்' செய்யுங்கள். உங்கள் நிலைமை உங்களுக்கே புரிந்து விடும்.1. யாராவது கஷ்டப்படும் போது, அவருக்காக சிறிய உதவி செய்திருக்கிறீர்களா?2. 'இந்த பிரச்னையை சமாளிக்க என்ன செய்யப்போகிறேன்' என்று யாராவது தவித்துக் கொண்டிருக்கும் போது, அவருக்கு வழிகாட்டி இருக்கிறீர்களா?3. யாராவது துயரத்தில் இருக்கும் போது, அவரை உற்சாகப்படுத்தும் வார்த்தைகளை பேசியிருக்கிறீர்களா?4. கெட்ட பழக்கங்களைக் கொண்ட ஒருவரை, திருத்தும் வகையில் அவரிடம் எடுத்துச் சொல்லியிருக்கிறீர்களா?5. கடவுளை நம்பாத ஒருவருக்கு 'மெய்யான வாழ்வு என்பது இறைவாழ்வு தான்' என எடுத்துச் சொல்லியிருக்கிறீர்களா?6. தன்னலத்தையும், பெருமை பேசுவதையும் ஒதுக்கிவிட்டு, பிறர் நலம் பேணுவதையும், தாழ்மையாக பேசுவதையும் கடைபிடிக்கிறீர்களா?7. சிக்கன வாழ்வு வாழாதவர்கள், சண்டை போடுபவர்கள் திருந்தும் வகையில் புத்திமதி சொல்லியிருக்கிறீர்களா?8. உங்கள் மனதில் இருந்து பகை உணர்வையும், பழி உணர்வையும் நீக்கி விட்டு, பாசத்தையும், மன்னிக்கும் மனப்பான்மையையும் வளர்த்துக் கொண்டிருக்கிறீர்களா?9. பிறரது கஷ்டங்களைக் குறைக்கும் வகையில் அந்தப் பளுவை ஏற்றிருக்கிறீர்களா? வேதனையைப் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்களா?10. உங்கள் வாழ்நாளில் ஒரு மரத்தை எந்த விளம்பரமும் இல்லாமல் நட்டு, அதன் நிழலில் பத்து பேர் இளைப்பாறுவதைப் பார்த்திருக்கிறீர்களா?இவற்றுக்கு 'ஆம்' என்ற பதில் வருமானால், நீங்கள் பென்சிலை பயன்படுத்தியே இருக்கமாட்டீர்கள்.கர்த்தரின் ஆசிர்வாதத்துக்கு ஆளாகியிருப்பீர்கள். 'இல்லை' என எங்காவது 'டிக்' செய்திருந்தால், இன்று முதல் அந்தக்கேள்விகளுக்கு 'ஆம்' என்ற பதில் வரும்படியாக உங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளுங்கள்.