வீழ்த்த முடியாதவர்கள்
UPDATED : ஏப் 09, 2023 | ADDED : ஏப் 09, 2023
* உயர்வான எண்ணம், விரிவான சிந்தனை, நேர்மையான செயல் இருப்பவர்களை வீழ்த்த முடியாது. * உடன் இருப்பவர்களுக்கு ஓடமாகவும், உதறிப்போனவர்களுக்கு பாடமாகவும் இருங்கள்.* பேச்சிலும், செயலிலும் ஒழுங்கு இருந்தால் அதுவே ஆனந்தம். * நல்ல மனிதர்களை சேமிப்பதில் தான் உண்மையான மகிழ்ச்சி உள்ளது.* தவறு நடப்பது இயல்பு. திருத்திக்கொள்ள நினைப்பது அறிவாளியின் செயல். * தளராமல் முயற்சி செய்யுங்கள். வெற்றி பெற்ற பின்னர் ஒதுங்கி சென்றவர்களும், குறை சொன்னவர்களும் உங்களை கொண்டாடுவர்.- பொன்மொழிகள்