உள்ளூர் செய்திகள்

உற்சாகமாய் எழுங்கள்

* காலையில் சீக்கிரமாகவும் உற்சாகமாகவும் எழுந்திருக்க வேண்டும் அதுவே ஆரோக்யத்தின் முதற்படி. * நாம் இருக்கும் இடமே நல்லது.* பிறர் இல்லாத நேரத்தில் அவர்களை பற்றி பேசாதீர்கள். * உயிர்கள் மீது இரக்கம் கொள்பவர் பாக்கியவான். * பொய் பேசி சேர்க்கும் பொருள் காற்றாய் பறந்து விடும்.* சகோதர சகோதரிகளை திட்டாதீர்கள்.* தன் உதடுகளை அடக்குபவரே புத்திசாலி.* பேசும் வார்த்தைகளை சுருக்கமாகவும் பிறருக்கு புரியும்படியும் பேசுங்கள்.* பணியில் கவனமாக செயல்படுங்கள்.* வீண் செலவுகளை குறையுங்கள்.* உங்களை வெறுப்பவர்களுக்கும் நன்மை செய்யுங்கள்.* எதை விதைக்கிறானோ அந்த விளைச்சலையே மனிதன் அறுவடை செய்கின்றான். * நம்பிக்கையோடு கூடிய புன்னகை, உங்களை விரும்பாதவரையும் திரும்பி பார்க்க வைக்கும்.* பாம்புகளைப் போல விவேகமும், புறாக்களைப் போல கபடமில்லாமலும் இருங்கள்.- பைபிள்