விளையாட்டாய் கூட...
UPDATED : ஆக 02, 2024 | ADDED : ஆக 02, 2024
ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் வால்டர் ஸ்காட். தத்துவவாதியான இவர் நமக்கு நல்ல விஷயங்களைப் போதிக்கிறார். ' பலதரப்பட்ட மனிதர்களை நாம் வாழ்வில் சந்திக்கிறோம். அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என உடனே முடிவு செய்ய நம்மால் முடியாது. இருந்தாலும் நட்பு கொள்ளும் போது உண்மையுடன் பழகுங்கள். விளையாட்டாய் கூட ஏமாற்ற வேண்டாம். இல்லாவிட்டால் பொய்யை சொல்லி அதை நிரூபிப்பதற்காக மேலும் மேலும் ஏமாற்ற நேரிடும். அதற்கு நட்பே வேண்டாம் என ஒதுங்கி விடுவது நல்லது' என்கிறார்.