நேரம் தவறாமை
UPDATED : ஆக 13, 2024 | ADDED : ஆக 13, 2024
தன் படைத்தளபதிகளை விருந்துக்கு அழைத்த நெப்போலியன், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே நிகழ்ச்சி வந்தார். ஆனால் தளபதிகள் வரவில்லை. விருந்து தொடங்க ஒரு நொடி மட்டுமே இருந்த போது பரிமாறுபவரை அழைத்த நெப்போலியன், “எனக்கு விருந்தை பரிமாறுங்கள்” என்றார். அவர் சாப்பிட்டு எழுந்திருக்கவும், படைத்தளபதிகள் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.அவர்களைக் கண்டதும், ''விருந்துக்குரிய நேரம் முடிந்து விட்டது. இது பணிக்குரிய நேரம். என்னுடன் வாருங்கள்' என அவர்களுடன் புறப்பட்டார். தளபதிகள் திகைத்தனர்.