உள்ளூர் செய்திகள்

அஞ்சாதீர்கள்

ஒருவருக்கு எப்படி வேண்டுமானாலும் கஷ்டம் வரலாம். அந்த நேரத்தில் விரக்தியுடன் ஆண்டவருக்கு விரோதமாக பேசக் கூடாது. “நீர் எம்மை இப்படி சோதிக்கிறீரே! நான் ஜெபம் செய்து என்ன பலனைக் கண்டேன் எனப் புலம்பக் கூடாது. கஷ்டங்களை பொறுமையுடன் ஏற்பவனே பண்புள்ளவன். மகிழ்ச்சியாக வாழ்பவர் எல்லாம் ஆண்டவரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றும், துன்பம் அனுபவிப்போர் எல்லாம் கைவிடப்பட்டவர்கள் எனக் கருதக் கூடாது. துன்மார்க்கன் பனையைப் போல செழிக்கலாம். நீதிமான் கடுமையான துன்பத்தை அனுபவிக்கலாம். இவை இரண்டும் நிகழத்தான் செய்யும். ஆனால் மரணத்திற்கு பின் துன்பம் என்பதே இல்லை. அங்கு மகிழ்ச்சி மட்டுமே. எனவே மரணத்திற்கு அஞ்சாமல் வாழுங்கள்.