சுயஒழுக்கம்
UPDATED : ஆக 22, 2024 | ADDED : ஆக 22, 2024
தன்னம்பிக்கை, திறமை, பணம் எல்லாம் இருந்தும் என்னால் ஜெயிக்க முடியவில்லை என சிலர் வருத்தப்படுவர். காரணம் அவர்களிடம் சுயஒழுக்கம் இல்லாததே. உலகத்தோடு ஒட்டி உறவாட வேண்டும். ஆனால் நீங்கள் நீங்களாக இருக்க வேண்டும். இந்த பூமியானது தன்னை தானே சுற்றியபடி, சூரியனையும் சுற்றுகிறது என்பது தெரியும். அதில் கவனிக்க வேண்டிய விஷயம். ஒரு ஒழுங்கான கதியில் தன்னை தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றுகிறது. இது தான் சுயஒழுக்கம்.