ஜாக்கிரதை
UPDATED : அக் 04, 2024 | ADDED : அக் 04, 2024
குழந்தைகள் வெளியே செல்லும் போது, 'ஜாக்கிரதையாக போய் வா' என பெற்றோர் அறிவுரை சொல்வார்கள். அவர்களைப் போல நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய விஷயங்களை வரிசைப்படுத்துகிறது பைபிள். 1. ஆத்துமாவை ஜாக்கிரதையாக பாதுகாத்துக் கொள்ளுங்கள். 2. ஜாக்கிரதை உள்ளவரின் ஆத்துமா பலமிக்கதாக இருக்கும். 3. நினைப்பதை செயல்படுத்த முயற்சிக்கும் போது ஜாக்கிரதையாக இருங்கள்.4. ஜாக்கிரதை உள்ளவர்களுடைய கைகள் ஆட்சி செய்யும். 5. ஜாக்கிரதையானவன் செயல்பாடுகள் செல்வத்தை அடைய துணைசெய்யும். 6. வேலையில் ஜாக்கிரதையாக இருப்பவன் முன்னிலை வகிப்பான். 7. தேவாலயத்துக்கு கொடுக்க வேண்டியதை ஜாக்கிரதையாக கொடுங்கள்.