சரியான பதிலடி
UPDATED : நவ 07, 2024 | ADDED : நவ 07, 2024
அமெரிக்க அதிபரான ஆப்ரகாம் லிங்கனை அவமானப்படுத்த எதிர்கட்சிகள் முடிவு செய்தன. நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது செருப்புடன் வந்த எதிர்க்கட்சி தலைவர், ''உங்கள் தந்தை தைத்துக் கொடுத்த செருப்பை தான் இன்று வரை அணிந்து வருகிறேன். எனவே ஒரு கூலித் தொழிலாளியின் மகன் என்பதை ஒரு போதும் மறக்காதீர்'' எனச் சொன்னார். அப்போது என் தந்தையிடம் வாங்கிய செருப்பு என்பதால் தான் அது இவ்வளவு நாளும் நன்றாக உழைக்கிறது. ஒருகால் அது அறுந்தால் என்னிடம் கொண்டு வாருங்கள் நான் தைத்துத் தருகிறேன்'' என பதில் சொன்னார் லிங்கன். கரகோஷம் அடங்க நீண்ட நேரமானது. எதிர்க்கட்சியினர் முகத்தில் ஈயாடவில்லை.