தவறான எண்ணம்
UPDATED : நவ 07, 2024 | ADDED : நவ 07, 2024
பண்ணையார் அளித்த விருந்தில் ஊர் மக்கள் அனைவரும் பங்கேற்றனர். அப்போது ஒருவரின் வைர மோதிரத்தை காணவில்லை. அவர் தம் அருகில் இருந்த அறிஞர் மீது சந்தேகப்பட்டு பண்ணையாரிடம் முறையிட்டார். இதைக் கேள்விப்பட்ட அறிஞர் மிகவும் வருந்தினார். இந்நிலையில் பண்ணையாரின் வேலையாட்கள் மோதிரத்தை திருடிய நபரை பிடித்து வந்தனர். உடனே அறிஞரிடம் மன்னிப்பு கேட்டார் பணக்காரர். அதற்கு ' உங்களை பெரிய மனிதர் என நான் நினைத்தேன். நீங்களோ என்னைத் திருடன் என நினைத்தீர்கள். இருவரின் எண்ணங்களும் தவறு' என்றார்.