அறிவாளிகள்
UPDATED : நவ 14, 2024 | ADDED : நவ 14, 2024
இந்த காலத்தில் பலர் சிறு தோல்வியை சந்தித்தால் கூட தவறான முடிவுக்கு சென்று விடுகின்றனர். ஏன் தோல்வி வந்தது என சிந்திப்பதில்லை. உதாரணமாக படிக்க சிரமப்படும் மாணவர்கள் எப்படி பாடத்தை புரிந்து கொள்வது, தேர்வை எப்படி அணுகுவது என ஆக்கபூர்வமாக சிந்திக்கலாம். நவீன சாதனங்கள் வாயிலாக புரிந்து கொள்ள வாய்ப்புகள் உள்ளன. அவற்றை பயன்படுத்தி முன்னேறலாம். இதனால் தான், 'எதிர்மறையாக சிந்திக்காதீர். ஏனெனில் நீங்கள் அறிவாளிகள்'.