அன்பு பாராட்டுங்கள்
UPDATED : நவ 14, 2024 | ADDED : நவ 14, 2024
விஞ்ஞானியாக வேண்டும் என வானியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டார் பீட்டர். அவரது ஆய்வு முடிவுகளை அரசு அங்கீகரித்தது. 'என் ஆராய்ச்சிக்கு அரசு அங்கீகரித்ததே வெற்றிக்கு காரணம்' என நிருபர்களிடம் பேட்டியளித்தார். அவரது மனைவியிடம் கேட்ட போது, 'ஆராய்ச்சியில் என் கணவர் வெற்றி பெற்றது உண்மை என்றாலும் குடும்ப வாழ்வில் தோற்று விட்டார். ஒருநாள் கூட என்னிடம் அன்பு காட்டியதில்லை. இருவரும் சேர்ந்து ஓட்டலுக்கோ, பூங்காவுக்கோ சென்றதில்லை' என்றாள். குடும்பத்தினரிடம் அன்பு பாராட்டுங்கள்.