உள்ளூர் செய்திகள்

தட்டுங்கள்

வயதான தாத்தாவுடன் சென்று கொண்டிருந்த சிறுவன் ஜாக்சனுக்கு பசியெடுக்க ஆரம்பித்தது. ஓட்டல் எதுவும் இல்லாததால் அருகே இருந்த ஒரு வீட்டின் கதவை தட்டி, 'சாப்பிட ஏதாவது கிடைக்குமா... சிறுவனுக்கு பசி பொறுக்க முடியவில்லை' எனக் கேட்டார் தாத்தா. அந்த வீட்டுக்காரரோ, 'சாப்பாடு எதுவும் தயாராக இல்லை' என பதிலளித்தார். ஆனாலும் விடவில்லை. 'சாப்பாடு இல்லாவிட்டாலும் பரவாயில்லை. இரண்டு ரொட்டி துண்டு கொடுங்கள்' எனக் கேட்டார் தாத்தா. அவர்களும் கொடுத்தனர். நம்பிக்கை, விடாமுயற்சியால் சிறுவனின் பசி நீங்கியது. தட்டுங்கள் திறக்கப்படும்.