வாழ்த்து
UPDATED : நவ 28, 2024 | ADDED : நவ 28, 2024
டூவீலரில் சென்று கொண்டிருந்தார் ஆசிரியர் ஒருவர். பாதி வழியில் வண்டி பழுதானது. ஒர்க் ஷாப்பிற்கு போன போது அங்குள்ள சுவரில், ' டூவீலரை நல்ல கண்டிஷனில் வைத்துக் கொண்டால் இங்கு வர வேண்டாம். பணமும் மிச்சமாகும்' என எழுதப்பட்டு இருந்தது. 'பணத்தை நோக்கி மனிதர்கள் ஓடும் போது நீங்கள் இப்படி இருக்கிறீர்களே... உங்களுக்கு என் பாராட்டுக்கள்' என்றார் ஆசிரியர். 'இடையூறு வரும் முன் அதை தடுக்கும் வழியைப் பார்' என என் தந்தையார் அறிவுரை சொல்வார். அதை நான் பின்பற்றுகிறேன்' என்றான் அந்த இளைஞன். 'நல்லவர்களுக்கு ஆண்டவர் துணையிருப்பார்' என வாழ்த்தினார் ஆசிரியர்.