மனம் தளராதே...
UPDATED : ஜன 23, 2025 | ADDED : ஜன 23, 2025
அமெரிக்காவை சேர்ந்த பி.டி.பேர்னம் இயந்திரங்களுக்கு பயன்படும் கிரீஸ் ஆலையை நிறுவினார். அதில் அவர் நஷ்டம் அடைந்தார். பின்னர் கடிகார உதிரி பாகங்களை செய்யும் நிறுவனம் ஒன்றை தொடங்கினார். அதிலும் நஷ்டம் அடைந்தார். ஆனாலும் மனம் தளரவில்லை. பல முறை யோசித்து தன் அனுபவத்தை கொண்டு புத்தகம் ஒன்றை எழுதினார். புத்தகத்தின் தலைப்போ, 'பணம் சம்பாதிப்பது எப்படி'. ஆயிரக்கணக்கான புத்தகம் விற்றது. இதுவரை அடைந்த நஷ்டத்தை சரிக்கட்டினார். மனம் தளர்ந்தால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது.