காலம் பதில் சொல்லும்
UPDATED : நவ 20, 2025 | ADDED : நவ 20, 2025
அறிவுரை சொன்னாலே சுதந்திரம் பறி போகிறது என எரிச்சல்படுவதும், அதை அலட்சியப்படுத்துவதும் சிலரின் வழக்கம். தங்களை வழிநடத்தும் பொறுப்பு பெரியவர்களுக்கு உண்டு என்பதை இவர்கள் உணர்வதில்லை. இப்படிப்பட்டவர்களுக்கு காலம் பதில் சொல்லும். 'நாளைய பெற்றோர் நாம்' என்ற உண்மையை அப்போது தான் அவர்கள் உணர்வர். பெற்றோரை அலட்சியப்படுத்தாதீர். அழுந்தி(நரகத்திற்கு) விடுவீர் என்கிறது பைபிள்.