வெற்றி உங்களுக்கே
UPDATED : நவ 20, 2025 | ADDED : நவ 20, 2025
தோல்வியால் மனம் வாடுவோருக்கு ரஷ்ய எழுத்தாளர் ஆண்டன் செக்கோவ் சொல்லும் அறிவுரையைக் கேளுங்கள். தோல்வி, ஏமாற்றம், பின்னடைவு ஏற்படுவது இயல்பான விஷயம் தான். அதற்காக துவண்டு போகாமல் நீங்களே அதற்கு பொறுப்பு என்பதை உணருங்கள். இல்லாவிட்டால் மனதில் சோர்வும், செயலில் தொய்வும் ஏற்படும். தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து சரிசெய்து மீண்டும் முயற்சியில் ஈடுபடுங்கள். வெற்றி உங்களுக்கே.