சிறந்தவர்
UPDATED : ஜன 01, 2025 | ADDED : ஜன 01, 2025
மெதீனாவில் இருந்த போது நபிகள் நாயகத்தின் செயல் பற்றி மனைவி ஆயிஷா சொல்வதை கேளுங்கள். 'நாயகம் தினமும் காலையில் படுக்கையில் இருந்து மெதுவாக எழுவார். மேலாடையை அணிந்து கொண்டு மெதுவாக கதவைத் திறப்பார். பிரார்த்தனை செய்ய புறப்படுவார். இப்படி சிறிதும் சத்தம் எழுப்பாமல் மென்மையாக அவர் செயல்பட என்ன காரணம் தெரியுமா? எனக்கு இடையூறு நேரக் கூடாது என்பதற்காகவே' என்றார். * மனைவியிடத்தில் சிறந்தவரே உங்களில் சிறந்தவர். * பெண்களிடத்தில் நல்லவராக இருங்கள்.