வரவேற்க வாருங்கள்
UPDATED : ஆக 11, 2023 | ADDED : ஆக 11, 2023
நாட்டின் அதிபர் ஒரு இடத்திற்கு செல்லும் போது அங்கு அவருக்கான பாதுகாப்பில் அதிகாரிகள் கவனம் செலுத்துவர். உரிய நேரத்தில் அவரின் வருகை பற்றி அதிகாரிகள் அறிவிப்பர். அவரின் பேச்சு கேட்பவரை உற்சாகப்படுத்தும். அதைப் போல தேவனின் வரவை பற்றி ' உற்சாகப்படுத்த வருகிறார். அவரை வரவேற்க வாருங்கள்' என அழைப்பு விடுத்தார் மதபோதகர்.