உள்ளூர் செய்திகள்

இழந்ததை திரும்ப பெறுங்கள்

இழந்த மதிப்பை பெற ஒருவர் என்ன செய்ய வேண்டும் என நண்பர் ஒருவர் உளவியல் அறிஞரிடம் கேட்டார். அதற்கு அவரோ வாழ்க்கையில் சிலர் கவுரவமாக வாழ்ந்து மதிப்பிழப்பர். அவர்கள் அதை மீண்டும் அப்படியே பெற வேண்டும் என்றால் கீழ்கண்டவற்றை நன்கு புரிந்து செயலாற்றினால் போதும் என்றார் அவர். * நடைமுறையில் உள்ள தற்கால சூழ்நிலையை அப்படியே ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம். * அச்சூழல் சரியாக இருந்தால் நன்கு பயன்படுத்திக் கொள்ளும் திறமை. * அச்சூழல் தவறாக இருந்தால் அதிலிருந்து பாதிக்கப்படாமல் இருக்கு சாமர்த்தியம் வேண்டும்.