நல்ல குணம்
UPDATED : ஜன 30, 2023 | ADDED : ஜன 30, 2023
அது இரண்டாம் உலகப்போர் நடந்த காலம். ஜெர்மனியின் விமானப்படை இங்கிலாந்தின் காவன்ட்ரி நகரத்தின் மீது குண்டு வீசியது. பதுங்குகுழி வசதி இருந்ததால், உயிர்ச்சேதம் இல்லை. எனினும் அந்நகரில் இருந்த ஆலயம் தாக்கப் பட்டது. மறுநாள் மக்கள் ஒரு போர்டில் 'பிதாவே இவர்களை மன்னியும்' என்று எழுதினர். நல்ல குணம் கொண்டவர்களால்தான், இதுபோல் செய்ய முடியும்.