வாழ்க்கையில் உயர்வோம்
UPDATED : ஆக 23, 2022 | ADDED : ஆக 23, 2022
வீட்டில் ஒருவருக்கு உடல்நலம் சரியில்லை என்றால் முதலில் கைமருந்து கொடுப்போம். அதிலும் குணமாகவில்லை எனில் மருத்துவரின் உதவியை நாடுவோம். அவர் தரும் சிகிச்சையால் நோயும் குணமாகும். இதைப் போலவே பாவத்தின் காரணமாக, நம் ஆத்மாவும் இப்போது நோய்க்கு ஆளாகி விட்டது. அந்த நோயை குணமாக்க ஒரே வழி நல்ல செயல்களை செய்வதுதான். இப்படி செய்து வாழ்க்கையில் உயர்வோம்