உள்ளூர் செய்திகள்

பெரியவங்க சொன்னா கேளுங்க

புற்களை மேய்ந்து கொண்டிருந்த காளைக்கூட்டத்தில் இரண்டு காளை மட்டும் சண்டையிட்டன. அதை அங்கிருந்த குளத்தில் வசித்த தவளைகள் வேடிக்கை பார்த்தன. வெளியே சென்று வந்த பெரிய தவளை வலிமையானவர்கள் சண்டையிட்டால் அதை நாம் வேடிக்கை பார்க்க கூடாது. அதனால் நமக்கு இழப்புத்தான் நேரும் என்றது. சிலவற்றை தவிர எல்லா தவளைகளும் குளத்தில் துள்ளிக் குதித்தன. அந்த நேரத்தில் சண்டையிட்ட காளைகள் குளத்தின் கரைப்பக்கம் வர சில தவளைகளின் மேல் அதன் கால் பட்டு பலியாயின. பெரியவங்க சொன்னா கேட்க வேண்டும்.