நிம்மதியாக வாழ...
UPDATED : செப் 16, 2022 | ADDED : செப் 16, 2022
பாசி படர்ந்த கிணற்றில் மீன்கள் வாழ்ந்து வந்தன. அதைக் கண்ட இளைஞர் ஒருவர் வளர்க்க விரும்பி அவற்றை பிடித்து வீட்டிலுள்ள தொட்டியில் விட்டார். இரையாக பொரியை துாவினார். ஆனால் அவை இரண்டு நாளிலேயே இறந்தன. பார்த்தீர்களா! மீன்கள் அதன் இயல்பில் வளர்ந்திருந்தால் உயிரோடு இருந்திருக்கும். அது போல ஒவ்வொருவருக்கும் ஒரு இயல்பு இருக்கும். அதை உணர்ந்து நடந்தால் நிம்மதியாக வாழலாம்.