உள்ளூர் செய்திகள்

சாந்த குணம் வேண்டும்

உலகில் வாழும் உயிரினங்கள் ஒவ்வொன்றும் பலவிதமான குணங்களை கொண்டிருக்கும். அதுபோல மனிதர்களிடமும் பல குணங்கள் ஒளிந்து இருக்கின்றன. கோபம், பொறாமை போன்ற தீயகுணங்களும், அன்பு, கருணை போன்ற நற்குணங்களும் பலரது மனதில் பொதிந்து உள்ளன. இவற்றில் எந்த குணம் அதிகமாக உள்ளதோ அதற்கேற்ப ஒருவரது செயல் அமையும். உதாரணமாக ஒருவரிடம் நல்ல எண்ணம் இருந்தால் அவரது பேச்சு, செயலில் நற்பண்பு மட்டுமே வெளிப்படும். இப்படி இருப்பவர்களது மனதில் சாந்தம் இருக்கும். இந்த குணத்தால் பல நன்மைகள் கிடைக்கும்.