சோதனை தேவையா...
UPDATED : ஜூன் 09, 2023 | ADDED : ஜூன் 09, 2023
தனக்காக உயிரையும் கொடுக்க கூடிய வீரனை அழைத்தார் அலெக்சாண்டர். காட்டுப்பகுதியில் எதிரிகள் முகாமிட்டுள்ளதாக செய்தி அறிந்தேன். அவர்களின் நடவடிக்கைகளை மறைந்திருந்து அறிந்து வா, அவர்களிடம் மாட்டிக்கொள்ளாதே என எச்சரித்து அனுப்பினார். காட்டில் எதிரிகள் இருப்பதற்கான சுவடுகள் இல்லை என அலெக்சாண்டரிடம் வீரன் சொன்னான். அதைகேட்ட அவரோ எனக்கு அங்கு ஒருவருமில்லை என்பது தெரியும். இருந்தாலும் உன் மீது எனக்கு முழு நம்பிக்கை உண்டு. உன் விஸ்வாசத்தினை அனைவருக்கும் தெரியப்படுத்துவே இந்த சோதனை என்றார் அலெக்சாண்டர். அவனை புறம் பேசிய மற்ற வீரர்கள் தலை குனிந்தனர்.