படியுங்கள்! உயருங்கள்!
UPDATED : டிச 19, 2022 | ADDED : டிச 19, 2022
மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு நீர், உணவு அவசியம். அதுபோல் சரி, தவறு எது என்பதை புரிந்து கொண்டு நடப்பதற்கு கல்வி அவசியம். எந்த சூழ்நிலையாக இருந்தாலும் கல்வி கற்பதை நிறுத்தக்கூடாது. அதைத்தான் விளாதிமிர் லெனினும் சொல்லியுள்ளார். ரஷ்யப் புரட்சி தீவிரமாக நடந்த காலகட்டம் அது. அப்போது சில மாணவர்கள் புரட்சியாளரான விளாதிமிர் லெனினைச் சந்தித்தனர். அவரிடம், ''இந்தப் போராட்டத்தில் நாங்கள் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டனர். அதற்கு அவர், ''உங்களுக்கு ஒரு கடமை உள்ளது. அதை மட்டும் சரியாக செய்யுங்கள்'' என்றார். அந்தக் கடமை என்னவாக இருக்கும் என்று அறிய ஆவலாக இருந்தனர் மாணவர்கள். அவர்களை பார்த்து சிரித்தவர், ''படியுங்கள். நீங்கள் நன்றாக படித்தால்தான் எனக்கு மகிழ்ச்சி'' என்றார்.