உள்ளூர் செய்திகள்

இவ்வளவு விதிமுறைகளா...

இந்தியாவிற்கு வரவிருந்த எலிசபெத் ராணியை வரவேற்க சிறுமிக்கு பயிற்சி அளித்தனர். அவர் முன் எவ்வாறு நடக்க வேண்டும். எப்படி பூங்கொத்தை கொடுக்க வேண்டும். நீயாக எதுவும் பேசக் கூடாது. அவர்களே உன்னிடம் பேசினால் பேசலாம் என பல விதிமுறைகளை சொல்லிக் கொடுத்தனர் அதிகாரிகள். ராணிக்கு சிறுமி உறவினராக இருந்தால் இந்த விதிமுறைகள் தேவையில்லை அல்லவா... அதுபோல தேவனுக்கு உறவினராக இருங்கள். எந்த விதிமுறைகளும் தேவைப்படாது.