உள்ளூர் செய்திகள்

சிறப்பான வாழ்க்கைக்கு அஸ்திவாரம்

உலகத்திலேயே மிகப் பெரிய சுமை எது? கடந்த காலம். இதில் அதிசயம் என்னவென்றால், இந்த சுமையை பற்றி பலருக்கும் தெரிவதில்லை. கடந்த காலம் என்பது கடல் போல விரிந்து பரந்து கிடக்கும் விஷயம். அதையே நினைத்துக் கொண்டிருந்தால் நிகழ்காலத்தை இழக்க வேண்டியிருக்கும். சரி இதற்கு தீர்வுதான் என்ன? குழந்தைகளைப் போல் மனதை வைத்திருங்கள். அப்படி இருந்தால் புதிதாகப் பூத்த பூக்கள் போல கலகலவென இருப்பீர்கள். இது எப்படி சாத்தியமாகிறது. குழந்தைகள் கடந்த காலம் என்ற குப்பைகளை மனதில் வைத்திருப்பதில்லை. அதற்காக கடந்த காலம் கற்றுத்தரும் பாடத்தை மறந்துவிடக்கூடாது. சிறப்பான வாழ்க்கை என்பது என்ன என்று கிரேக்க ஞானி ஒருவர் சொல்லும் கருத்து இதுதான். 'ஆரோக்கியமான உடல்நலமும் மோசமான ஞாபகசக்தியும்தான் சிறப்பான வாழ்க்கைக்கு அஸ்திவாரம்' என்கிறார்.