உள்ளூர் செய்திகள்

புத்தி தெளிந்தது

பலரும் தங்கி படிக்கும் விடுதி ஒன்றில் குறும்புக்கார மாணவன் தினமும் இரவில் ஊர் சுற்றி வந்தான். அவன் செய்கையை அறிந்த நண்பர்கள் அவனுக்கு அறிவுரை சொல்லியும் கேட்கவில்லை. ஒரு நாள் நள்ளிரவில் விடுதி காப்பாளர் திடீர் என சோதனை செய்ய வந்தார். அப்போது ஒரு மாணவன் மட்டும் குறைவதை தெரிந்து கொண்டார். எப்படி வெளியே சென்றான் என வளாகத்தை சுற்றி வந்த அவர் சுற்றுச்சுவர் அருகே முக்காலி இருப்பதை கண்டார். அவன் வரும் நேரம் பார்த்து முக்காலியை எடுத்து விட்டு அவரே குனிந்து நின்றார். சுவரின் மேல் ஏறிய மாணவன் அவர் முதுகில் கால் வைத்து வளாகத்திற்குள் குதித்தான். அப்போது அவன் செய்த தவறு புத்தியில் உரைத்தது. பிறகென்ன அது போன்ற செயலில் அவன் ஈடுபடவில்லை.