உள்ளூர் செய்திகள்

நல்ல எண்ணங்களை விதைப்போம்

ஒருவரது வாழ்வும் தாழ்வும் அவரவர் செயல்பாடுகளால் விளைவது. நம் மனதில் கருணை, அன்பு, அடக்கம், பொறுமை, துாய்மை போன்ற நல்ல எண்ணங்களும், கோபம், குரோதம், பொறாமை, பேராசை, அறியாமை போன்ற எதிரிடையான எண்ணங்களும் அலைமோதிக் கொண்டிருக்கும். செழித்த பயிர்களுக்கு இடையில் களைகள் தோன்றுவது உண்டு. அவற்றைக் களைந்து பயிரைப் பாதுகாப்பது போல், கெட்ட எண்ணங்களைக் களைய வேண்டும். பின் நல்ல எண்ணங்களை விதைக்க வேண்டும். இதற்கு இளமைப்பருவமே உகந்த வேளை.