எது எளிமை
UPDATED : ஏப் 25, 2023 | ADDED : ஏப் 25, 2023
எளிமையாக வாழ்ந்தால் நிம்மதியாக இருக்கலாம் என நினைத்த பணக்காரர் ஒருவர் குடிசை அமைத்து வாழ்ந்து வந்தார். என்னைப்போல எளிமையாக யாரும் வாழவில்லை என்ற எண்ணம் அவருக்கு சில நாளில் தலை துாக்கியது. அதனால் அவர் யாரையும் மதிக்கவில்லை.அறிஞர் ஒருவர் அவரது எண்ணத்தை புரிந்து கொண்டு, அவரிடம் எளிமை என்பது உடையிலோ, உணவிலோ இல்லை. அது அவரவர் மனதில் தான் உள்ளது. அது தான் உங்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தும் என்றார் அறிஞர். புரிந்து கொண்ட பணக்காரர் மீண்டும் தன் பழைய வீட்டிற்கு புறப்பட்டார்.