வெள்ளை மனசு
UPDATED : மே 02, 2023 | ADDED : மே 02, 2023
கருப்பு நிறம் கொண்டவள் சிறுமி புனிதா. தன்னோடு யாரும் விளையாடுவதில்லை என்ற கவலை அவளுக்கு உண்டு. ஒருநாள் பள்ளி வாசலில் உள்ள வியாபாரியிடம், இதில் எந்த நிறப் பலுான் அதிக உயரத்தில் பறக்கும் என கேட்டாள். அதற்கு அவர் எல்லா நிற பலுானும் உயரத்தில் பறக்கும் என சொன்னார்.கருப்பு கலர் பலுான் உயரத்தில் பறக்குமா ஏன்என்றால் நானும் கருப்பு தான் அதனால் கேட்டேன் என்றாள். அவளின் ஏக்கத்தை புரிந்து கொண்ட அவர், எந்த நிறமாக இருந்தாலும் காற்றுள்ள பலுான் தான் பறக்கும்.அது போல கருப்பாக இருந்தாலும் மனசு துாய்மையாக இருந்தால் போதும். விளையாட்டிலும், படிப்பிலும் உயர்வாய் என சொன்னார் வியாபாரி.