சிவனை மறவேன்
UPDATED : மார் 12, 2026 | ADDED : மார் 12, 2026
* தேவாரம் பாடிய மூவர் சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்.* தேவாரப் பாடல் பெற்ற துளுவ நாட்டு சிவத்தலம் கர்நாடகாவிலுள்ள திருக்கோகர்ணம்.* மன்னர் அநபாயச் சோழனிடம் அமைச்சராக இருந்தவர் சேக்கிழார்.* சிதம்பரத்திற்கு பெரும்பற்றப்புலியூர் என்றும் பெயருண்டு. * ஆமை சிவபூஜை செய்த தலம் திருமணஞ்சேரி.* பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்களில் தமிழகத்திலுள்ள ஒரே தலம் ராமேஸ்வரம்.* சிவனின் திருக்கோலங்களில் கருணாமூர்த்தியாக திகழ்வது சோமாஸ்கந்தர்.* பஞ்சாட்சர மந்திரத்தை தமிழில் 'திருவைந்தெழுத்து' என்று சொல்வர். * சிவனடியாருக்கு அன்னமும், பொருளும் தானம் அளித்தவர் சிறப்புலி நாயனார்.* சிவனுக்கு மலர்த்தொண்டு புரிந்தவர் முருக நாயனார்.* ஆளுடைய பிள்ளை என அழைக்கப்பட்டவர் திருஞானசம்பந்தர்.* நெஞ்சுவிடு துாது என்னும் சைவ சாஸ்திர நுாலை எழுதியவர் உமாபதி சிவாச்சாரியார்.