உள்ளூர் செய்திகள்

தண்ணீர் தீபம்

* தண்ணீரால் சிவனுக்கு தீபம் ஏற்றியவர் நமிநந்தியடிகள்.* பன்னிரு திருமுறைகளில் சுந்தரரின் தேவாரத்தை 'திருப்பாட்டு' எனக் குறிப்பிடுவர்.* இலங்கையிலுள்ள இரண்டு தேவாரத் தலங்கள் திரிகோணமலை, திருகேதீச்சரம்.* மயில் வடிவில் சிவனை வழிபட்ட அம்பிகை மயிலாப்பூர் கற்பகாம்பாள்.* திங்களன்று சிவராத்திரி வந்தால் அதற்கு 'யோக சிவராத்திரி' என்று பெயர்.* திருநாவுக்கரசர் கைலாய காட்சி பெற்ற சிவத்தலம் திருவையாறு ஐயாறப்பர் கோயில்.* பூலோக கைலாயம் என போற்றப்படும் தலம் சிதம்பரம் நடராஜர் கோயில்.* ஆடும், யானையும் சிவபூஜை செய்த தலம் திருவாடானை.