உள்ளூர் செய்திகள்

கேளுங்க சொல்கிறோம்

எஸ்.மணிகண்டன், புளியரை, தென்காசி.:*ஐயப்ப பக்தர்கள் எந்த நிற ஆடை உடுத்த வேண்டும்?நீலம், காவியை தவிர வேறு நிற ஆடை உடுத்தக் கூடாது. எம்.சீனிவாசன், திருவந்திபுரம், கடலுார்: *துன்பத்தை ஏற்கும் பக்குவம் ராமருக்கு எப்படி வந்தது?தவ வாழ்வு வாழ்ந்ததால் துன்பத்தை ஏற்கும் பக்குவம் ராமருக்கு இருந்தது. இ.சங்கரன், தோவாளை, கன்னியாகுமரி: *திருக்கச்சி நம்பி பற்றி சொல்லுங்கள்...ராமானுஜரின் குருநாதரான இவர், காஞ்சி வரதராஜப்பெருமாளுடன் நேரடியாக பேசியவர். கே.சுபாஷினி, குன்னுார், நீலகிரி: *குடும்ப மகிழ்ச்சிக்கு...தேவாரத் தலங்களை தரிசியுங்கள். மகிழ்ச்சியும், நிம்மதியும் கிடைக்கும். ஆர்.அமராவதி, திருத்தணி, திருவள்ளூர்: *பிறந்த ராசிக்கு ஏற்ப குணம் அமையுமா?ஆம். அந்தந்த ராசிக்கான கிரகத்தைப் பொறுத்து குணம் அமையும். பி.மிருளாயினி, ஆண்டிபட்டி, தேனி: *பிறந்த தேதியை வைத்து பலன் சொல்வது சரிதானா...ஒவ்வொரு எண்ணிற்கும் ஒவ்வொரு கிரகம் உரியது. அதன்படி பிறந்த தேதியை வைத்து பலன் கூறுவது எண்ஜோதிடம். எம்.கார்த்திகா, ஜூஜூவாடி, பெங்களூரு: *ஆதித்ய ஹ்ருதயம் படித்தால்...நோய்கள் தீரும். கண்பார்வை குறைபாடு நீங்கும். ஏ.கயற்கண்ணி, பசுமலை, மதுரை: *கிரகணத்தின் போது கர்ப்பிணிகள் வெளியே செல்லக் கூடாதாமே... ஏன்?கருவில் உள்ள குழந்தைக்கு கிரகண தோஷம், உடல் பாதிப்பு ஏற்படும் என்பதால்.டி.பவதாரிணி, மந்திஹவுஸ், டில்லி:*இசையில் சிறக்க யாரை வழிபடலாம்?அம்மனுக்கு தேன் அபிஷேகம் செய்து வழிபடுங்கள்.